அமெரிக்காவுடன் செயற்பட்ட விதமே பிரிட்டனின் தற்போதைய பிரச்சினைக்கு காரணம் – முன்னாள் அதிகாரி விசனம்
ஈரான் மீதான போரின் ஆரம்ப கட்டத்தில் பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் நாட்டின் நலன்களுக்கு சிறப்பாகச் சேவை செய்யவில்லை என முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலாளர் டேவிட் ஓவன் (David Owen) குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரித்தானியா தங்களை கைவிட்டதாக அமெரிக்கா இராணுவம் நினைக்க பிரதமர் அனுமதித்துவிட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இராணுவ விவகாரங்களில் அமெரிக்காவுடன் செயற்பட்ட விதமே தற்போது பிரச்சனையாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் நடவடிக்கைகளால் அமெரிக்க இராணுவத்தினரிடையே அதிருப்தி அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1977 ஆம் ஆண்டு முதல் 1979 ஆம் ஆண்டு வரை வெளியுறவுத்துறைச் செயலாளராகடேவிட் ஓவன் (David Owen) பணியாற்றினார்.




