மத்திய கிழக்கு மோதலில் பிரித்தானியா மேலும் தலையிடாது -பிரதமர்
மத்திய கிழக்கில் நிலவும் மோதலில் பிரித்தானியா மேலும் தலையிடாது என பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
வோல்வர்ஹாம்டனில் (Wolverhampton)தொழிலாளர் கட்சியின் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் போதே அவர் இதனைக் கூறினார்.
உலக நிலைமை தற்போது நிச்சயமற்றதாக உள்ளதெனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதல் நமது போர் அல்ல என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர் நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், தற்போது ஈரான் தொடர்பான புதிய மோதல் உலகளவில் கவலைக்குரிய சூழ்நிலையை
உருவாக்கியுள்ளது எனவும் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் கவலை வெளியிட்டார்.





