எதிர்பாராத அளவில் வளர்ச்சிக் கண்ட பிரேசிலின் பொருளாதாரம்!
பிரேசிலின் பொருளாதாரம் 2023 இல் 2.9% வளர்ச்சியடைந்ததுள்ளதாக புள்ளியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் நிர்வாகத்தின் முதல் ஆண்டில் எதிர்பார்ப்புகளை முறியடித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
IBGE ஆல் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கை பல பொருளாதார வல்லுனர்களைக் கவர்ந்தது, கடந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர்களின் ஒட்டுமொத்த கணிப்பு 2023 இல் 0.8% வளர்ச்சி மட்டுமே இருக்கும் எனக் கூறப்பட்டது.
ஆனால் கடந்த ஆண்டில் பொருளாதாரமான எதிர்பாராத விதமாக 3 வீதம் அதிகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட பூர்வாங்க மொத்த உள்நாட்டு உற்பத்தி எண்களின் அடிப்படையில், பிரேசிலின் பொருளாதாரம் இப்போது உலகின் ஒன்பதாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.





