ஆஸ்திரேலியாவில் நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் : மும்முரமாக இடம்பெறும் தேடுதல் பணி!
ஆஸ்திரேலியாவின் வடக்கு அவோகா கடற்கரையில் சிறுவன் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் போலீசார் தெரிவித்தனர்.
சிறுவனைக் கண்டுபிடிக்க கடல் மற்றும் வான்வழி நடவடிக்கை நடந்து வருவதாகவும், சர்ப் லைஃப் சேவர்ஸ், துணை மருத்துவர்கள் மற்றும் வெஸ்ட்பேக் மீட்பு ஹெலிகாப்டர் ஆகியவை சேவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அருகிலுள்ள டெரிகலில் உள்ள மரைன் ரெஸ்க்யூவின் தன்னார்வத் தொண்டர்களும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவன் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் இரவு வரை தேடுதல் பணி தொடரும் என NSW போலீஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.





