உலகம் செய்தி

போண்டியில் உயிர்களைக் காத்த ஹீரோ! குண்டடிபட்ட அகமதுக்குக் குவிந்த மனிதாபிமான உதவி!

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) நடந்த துப்பாக்கிச் சுட்டு சம்பவத்தின் போது துணிச்சலாகச் செயல்பட்ட அகமது அல் அகமது (Ahmed al Ahmed, 43) என்ற நபருக்கு ஆஸ்திரேலியா முழுவதும் இருந்து அன்பளிப்பாக 1.1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலருக்கும் அதிகமாக இந்திய மதிப்பில் சுமார் 744,000 ரூபா வரை கிடைத்துள்ளது.

யூதர்களின் ஹனுக்கா கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவரிடம் இருந்து அகமது துப்பாக்கியைப் பிடுங்கி, அவரைக் கீழே தள்ளினார். இவரது துணிச்சலான செயல், மேலும் பலரை உயிரிழப்பில் இருந்து காத்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செயலின்போது, அகமது துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அறுவை சிகிச்சை முடிந்து தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான அகமது ஒரு சிரிய-ஆஸ்திரேலியர் என்றும், அவர் தனது கடமையின் காரணமாகவோ அல்லது மதத்தின் காரணமாகவோ அல்லாமல், மக்களைக் காப்பாற்ற மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே செயல்பட்டதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அகமதுவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட கோ பண்ட் மீ (GoFundMe) நிதி திரட்டும் முயற்சியில், ஒரே நாளில் 1.1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலருக்கும் மேல் அன்பளிப்பாக பணம் கிடைத்துள்ளது.

மேலும் இந்தத் தாக்குதலை 50 வயதான தந்தை மற்றும் அவரது 24 வயதான மகன் ஆகிய இருவரே நடத்தியதாக ஆஸ்திரேலிய காவல்துறை திங்களன்று (இன்று) தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம், கடந்த மூன்று தசாப்தங்களில் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான துப்பாக்கிச்சூடு சம்பவமாகக் கருதப்படுகிறது. தாக்குதலில் மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டனர்.

AJ

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!