ஆஸ்திரேலியா உலகம் செய்தி

போண்டி தாக்குதல்: நாளை ஆஸ்திரேலியாவில் தேசிய துக்க தினம்

சிட்னி போண்டி (Bondi) கடற்கரையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக, நாளை ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அனைத்து அரசு கட்டிடங்களிலும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் இடம்பெற்ற அதே நேரமான மாலை 6.47 மணிக்கு, நாடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாள் தேசிய ஒற்றுமையை வெளிப்படுத்தும் நாள் என்றும், துயருற்றிருக்கும் யூத சமூகத்துடன் அரசாங்கம் துணை நிற்கும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!