ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் – அதிர்ச்சியில் திரையுலகம்
சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறப்போவதாகவும் நேற்று பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு நேற்று மர்ம நபர் மூலமாக இந்த மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அடங்கிய குழுவினர் மோப்ப நாய் உதவியுடன் ரஜினிகாந்த் வீட்டை சோதனையிட சென்றனர்.
ஆனால், நடிகர் ரஜினி தனது வீட்டை சோதனையிட சம்மதிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இதனால் சோதனை செய்யாமலேயே போலீசார் திரும்பினர். மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(Visited 1 times, 1 visits today)




