லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட போயிங் விமானம்!

டல்லாஸ் ஃபோர்ட் வொர்த் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் போயிங் 777, லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிரக்கப்பட்டது.
இயந்திரக் கோளாறு ஏற்படக்கூடும் என்று அதன் பைலட் தெரிவித்ததை அடுத்து, மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் 249 பயணிகள் இருந்ததாகவும் அவர்கள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாகவும் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
போயிங் விமானத்தின் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
(Visited 12 times, 1 visits today)