இலங்கை செய்தி

விபத்தில் பலியானவரின் சடலத்தை 2 வருடங்களின் பின் தோண்டியெடுப்பு

மன்னார் நீதிமன்றத்தில் விபத்து தொடர்பான வழக்கில் உள்ள நபரான ஜேசுதாசன் ரஞ்சித்குமார் (வயது 40) இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் யாழ்ப்பாணம் – கல்லூண்டாயில் உள்ள சேமக்காலையில் அவரது உடலம் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக அவரது சடலத்தை தோண்டுமாறு மல்லாகம் நீதிமன்றம் விசேட உத்தரவு பிறப்பித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மன்னார் – இலுப்பை கடவை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குறித்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அதன்பின்னர் நவாலி பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், அவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவர் மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக வைத்தியர் ஒருவர் தெரிவித்த நிலையில், கிராம சேவகரும் அதற்கு இணங்க பூர்வாங்க செயற்பாடுகளை மேற்கொண்டார்.

இந்நிலையில், கல்லூண்டாய் சென். பீற்றர் தேவாலய சேமக்காலையில் அவரது சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

குறித்த நபர் மீதான விபத்து, மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குறித்த நபர் அங்கு பிரசன்னமாகவில்லை.

குறித்த நபர் உயிரிழந்து, அவரது சடலம் யாழ்ப்பாணத்தில் புதைக்கப்பட்ட விடயம் அதன்பின்னரே நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.

அந்தவகையில் சடலத்தை புதைத்த பகுதி மல்லாகம் நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் உள்ளமையால் இது குறித்து மல்லாகம் நீதிமன்றத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்டது.

இவ்வாறான பின்னணியில் குறித்த நபரின் சடலத்தை நாளையதினம் (03) தோண்டி எடுத்து உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்தவகையில் நாளையதினம் குறித்த நபரின் சடலம் மல்லாகம் நீதிமன்ற நீதிவான், சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகளின் முன்னிலையில் தோண்டப்படவுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை