ஆங்கிலக் கால்வாயில் விபத்தில் சிக்கிய படகு – 66 பேர் மீட்பு!
ஆங்கிலக் கால்வாயில் விபத்தில் சிக்கிய படகில் இருந்து 66 நபர்களை பிரெஞ்சு அதிகாரிகள் வெற்றிகரமாக மீட்டனர்.
பாஸ்-டி-கலைஸ் (Pas-de-Calais) கடற்கரையில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மீட்கப்பட்ட அனைவரும் மருத்துவ நடவடிக்கைக்காக கலைஸ் (Calais) துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆங்கிலக் கால்வாயில் ஆபத்தான பயணங்களை தவிர்க்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளபோதிலும் பிரித்தானியாவை அடையும் நோக்கில் பலர் இவ்வாறான பயணங்களை மேற்கொள்கின்றனர்.
இந்த ஆண்டு 1,208 பேர் இந்த கால்வாயை வெற்றிகரமாக கடந்து பிரித்தானியாவை அடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





