ஈரான் எரிவாயு தளங்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தனித்து மேற்கொண்டது
ஈரானிய எரிவாயு தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேல் “தனித்துச் செயல்பட்டது” என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதை வலியுறுத்தியதுடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேட்டுக்கொண்டதன் பேரில், எதிர்காலத் தாக்குதல்களை தற்காலிகமாக இடைநிறுத்த தனது இராணுவம் ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.
இந்நிலையில் பெஞ்சமின் நெதன்யாகு தனது கருத்துகள் மூலம், தானும் டொனால்ட் டிரம்ப்பும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளோம் மற்றும் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்படுகிறறோம் என்பதை வெளிப்படுத்த முயன்றார் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, உலகின் சுமார் 20% எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) கடந்து செல்லும் முக்கியப் பாதையான ஹார்முஸ் நீரிணையை சுற்றியுள்ள பதற்றம், உலகளாவிய எரிசக்தி போக்குவரத்தை பாதித்துள்ளது.
அமெரிக்காவின் கூட்டணி நாடுகள், நீரிணை வழியாகப் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகளில் பங்களிக்கத் தயாராக உள்ளதாகக் கூறி ஒரு கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
மத்திய கிழக்கில் நிலவும் இந்த மோதல், உலகளாவிய பொருளாதாரத்திலும் பாதுகாப்பு சூழலிலும் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.





