பொழுதுபோக்கு

மே 15 இல் திரைக்கு வருகிறது ‘கருப்பு’?

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் எதிர்வரும் மே 15 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதென தெரியவருகின்றது.

படப்பிடிப்புகள் எல்லாம் நிறைவடைந்திருந்தாலும், தமிழக சட்டபேரவைத் தேர்தல் திகதி வெளியாகும்வரை படக்குழுவினர் காத்திருந்தனர்.

தேர்தல் காலப்பகுதியை வைத்து தமது படத்தின் வெளியீட்டு திகதி நிர்ணயிக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் தேர்தல் திகதி நேற்று அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 23ஆம் திகதி தேர்தலும், மே 4-ம் ஆம் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே ‘கருப்பு’ படத்தினை மே 15-ம் திகதி வெளியிடலாமா என பரிசீலிக்கப்பட்டுவருகின்றது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, அனகா மாயா ரவி உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளனர்.

Dila

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!