பாஜகவின் 9 ஆண்டு கால ஆட்சியால் பேரழிவு! எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
பாஜகவின் கடந்த 9 ஆண்டு கால ஆட்சி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தன பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆலோசித்தோம்.
பாஜகவின் கடந்த 9 ஆண்டு கால ஆட்சி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் ஜனநாயகத்துக்கும் சமூகத்துக்கும் பாஜக ஆட்சியில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. மோடி தலைமையிலான அரசு பெரும் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது.
பெரும் தொழிலதிபர்களுக்காக மட்டுமே மோடி அரசு திட்டங்களை செயல்படுத்துகிறது. நாட்டில் ஜனநாயகம் என்பதே இல்லாமல் போய்விடும். பாஜக தோற்கடிக்கப்பட்டே ஆக வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன என்று கூறியுள்ளார்.