இந்தியா செய்தி

ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து நீக்குமாறு கோரி பாஜக எம்பி முன்மொழிவு

ராகுல் காந்தியை, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்‌ என்றும் அவர் மீண்டும் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவையில் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்துள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிஷிகாந்த் துபே, ‘‘இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்க விரும்பும் ஜார்ஜ் சோரஸ் போன்ற சக்திகளுடன் சேர்ந்து கொண்டு ராகுல் காந்தி எவ்வாறு நாட்டை தவறாக வழிநடத்துகிறார் என்பது குறித்து மக்களவையில் இன்று (12) தீர்மானம் ஒன்றை முன்மொழிந்துள்ளேன்.

அந்த தீர்மானத்தில், ராகுல் காந்தியின் உறுப்பினர் பதவி இரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

 

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!