பிக் பாஸ் வீட்டுக்குள் புயலாய் கிளம்பிய அடுத்த வைல்ட் கார்ட்…
விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், முதல் வைல்ட் கார்ட் போட்டியாளராக பாக்யலட்சுமி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்த நடிகை திவ்யா கணேஷ் செல்கின்றார்.
இந்த நிலையில் அடுத்த போட்டியாளர் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது.
திவ்யா கணேஷைத் தொடர்ந்து, ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இன்னொரு ப்ரோமோவும் வெளியாகி இருக்கிறது.
அந்தப் ப்ரோமோவில் நடிகர் பிரஜன், “நானும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராகப் போகிறேன் என்று கூறிக்கொண்டு வருகின்றார்.
இவர் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு மரியாதை கொஞ்சம் கூடத் தெரியவில்லை. அவர்களுக்கு மரியாதையைச் சொல்லிக் கொடுத்து, அவர்களுடைய முகத்திரையைக் கிழிக்கப் போகிறேன். நான் என்னுடைய இன்னொரு முகத்தை அங்கே காட்டுகிறேன்” என்று அவரும் சவால் விட்டிருக்கிறார்.





