பிக் பாஸ் தமிழ் சீசன் – 9 : முதல் வைல்ட் கார்ட் போட்டியாளர் இவர்தான்…
விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், முதல் வைல்ட் கார்ட் போட்டியாளர் யார் என்பதை விஜய் டிவி அறிவித்துள்ளது.
இருபது பேருடன் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் வீட்டில் இருந்து, நந்தினி முதல் வாரத்திலேயே தாமாக வெளியேறினார்.
பிரவீன் காந்தியும் அப்சரவாவும் அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் வெளியேறினர். கடந்த வாரம் ஆதிரை வெளியேறி இருக்கின்றார்.
இந்த நிலையில் தான் முதல் வைல்ட் கார்ட் போட்டியாளர் பற்றி புதிய புரோமோ வெளியாகி உள்ளது.
பாக்யலட்சுமி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்த நடிகை திவ்யா கணேஷ் தான் அந்த வைல்ட் கார்ட் போட்டியாளராக பிக் பாஸ் செல்லவிருப்பது உறுதியாகியிருக்கிறது.
(Visited 3 times, 3 visits today)





