கமருதீனை மேடையேற்றிய விஜய் சேதுபதி – கொண்டாடிய இரசிகர்களுக்கு ஏமாற்றமா?
பிக்பாஸ் தமிழ் சீசன் 09 இன்றுடன் (18) நிறைவுக்கு வருகிறது.
இதில் விக்ரம், சபரி, திவ்யா கணேஷ் மற்றும் அரோரா என நால்வர் இறுதிப் போட்டியாளர்களாக உள்ளனர்.
இந்நிலையில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கின் போது மிகவும் மோசமாக நடந்து கொண்ட கமருதீன் மற்றும் பார்வதியை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினாரகள்.
டிக்கெட் டூ ஃபினாலே நடைபெற்றுக் கொண்டு இருந்த போது, இறுதி டாஸ்க் ஆன கார் டாஸ்க்கின் போது சக போட்டியாளரான சாண்ட்ராவை பார்வதி மற்றும் கமருதீன் என இருவரும் இணைந்து காலால் எட்டி உதைத்து வெளியே தள்ளினர்.
இது போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி, இரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன்பின்னர் அந்த வாரத்தின் இறுதியில் கமருதீன் மற்றும் பார்வதி இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.
இவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிய போது, பிக்பாஸ் இரசிகர்கள் பலரும் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து, ஆட்டம் பாட்டம் என கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.
ஒரு போட்டியாளருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டபோது இரசிகர்கள் யாரும் இதற்கு முன்னர் இந்த அளவுக்கு கொண்டாடியதில்லை.
இது மட்டும் இன்றி விஜய் டிவி தரப்பில், பிக் பாஸ் வரலாற்றில் ஒரு எபிசோடை மீண்டும் ரீ டெலிகாஸ்ட் செய்தது எல்லாம் இவர்கள் இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்தது தொடர்பான எபிசோட் தான்.
இந்நிலையில் இன்று இறுதிப் நாளில் கமருதீனை மேடை ஏற்றி, இரசிகர்களுக்கும் சக போட்டியாளர்களுக்கும் பிக்பாஸ் மற்றும் விஜய் சேதுபதி ஷாக் கொடுத்துள்ளார்கள்.





