“பிக்பாஸ் தமிழ்” இந்த வாரம் வெளியேறும் நபர் யார் தெரியுமா?
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், 4வது வாரமான இந்த வாரத்தில் யார் எலிமினேட் ஆகவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இம்முறை பல போட்டியாளர்கள் புரிந்து கொள்ளாமல் தரக்குறைவாக பேசியும், கீழ்த்தரமான செயல்களையும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற லாக்கர் டாஸ்க்கிலும் போட்டியாளர்கள் வழக்கம் போல் கத்தி கூச்சலிட்டும், தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தி தான் வருகின்றனர்.
இதற்கு விஜய் சேதுபதி என்ன கண்டனம் தெரிவிப்பார் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்து கொண்டிருக்கின்றனர்.
அதற்கு சாதகமாகவே தற்போது வெளியான புரோமோவிலும் ரொம்ப கத்துராங்கல, ஒரு தடவ சொன்னா புரியாது.. சொல்லிடுவோமா என விஜய் சேதுபதி கூறுவது போன்று வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் யார் இந்த வாரம் வெளியேறவுள்ள தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது கலையரசன் தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது.
வோட்டிங் அடிப்படையில் அவர் தான் கடைசியில் இருப்பதாகவும், நாளைய எபிசோட்டில் விஜய் சேதுபதி இதை அறிவிப்பார் எனவும் தகவல் கசிந்துள்ளது.
மேலும், வைல்ட் கார்ட் போட்டியாளராக உள்ளே செல்லும் நபர்கள் குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. அதாவது சின்னத்திரை நடிகர்களான திவ்யா, பிரஜன், சாண்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே செல்லவுள்ளார்கள்.
இவர்கள் இந்த வாரம் உள்ளே செல்வார்கள் என்றும், இதன் மூலம் பிக்பாஸில் வீட்டில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழவுள்ளதாகவும் கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் பொருத்திருந்து பார்க்கலாம்.





