பொழுதுபோக்கு

விஜய் டிவி வெளியிட்ட திடீர் அறிக்கை… ஆனால் அதை மட்டும் சொல்லவே இல்ல

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் இருந்து கமல்ஹாசன் விலகிய நிலையில், அதுதொடர்பாக விஜய் டிவி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்து உள்ளது. அந்நிகழ்ச்சியின் 8வது சீசன் வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. நிகழ்ச்சியின் புரோமோ ஷூட்டும் விரைவில் தொடங்க இருந்த நிலையில், திடீரென அந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். அவரின் அறிவிப்பால் ரசிகர்கள் ஷாக் ஆகினர்.

அடுத்த தொகுப்பாளரை தேர்வு செய்யும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகியது பற்றி விஜய் டிவி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதில் 7 ஆண்டுகளாக ஈடு இணையில்லாத பங்களிப்பை கொடுத்த கமல் சாருக்கு நன்றி, நீங்கள் ஆடியன்ஸோடு மட்டுமல்லாமல், போட்டியாளர்களிடமும் பேசி அவர்களிடம் இருக்கும் சிறந்ததை வெளிக்கொண்டு வந்தீர்கள்.

அதனால் தான் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இந்தியாவில் நம்பர் 1 ரியாலிட்டி ஷோவாக உருவெடுத்தது. இந்த நிகழ்ச்சியில் இருந்து பிரேக் எடுப்பதாக நீங்கள் அறிவித்திருப்பது எங்களுக்கு வருத்தமளிக்கிறது.

இருந்தாலும் உங்களின் காரணங்களை மதிக்கிறோம், உங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம். நீங்கள் இல்லா பிக்பாஸை மிஸ் பண்ணுவோம், ஆனால் ஒரு தொகுப்பாளராக நீங்கள் விட்டுச்சென்ற லெகஸி என்றென்றும் எங்களை ஊக்குவிக்கும்.

உங்களின் சினிமா கெரியருக்கு வாழ்த்துக்கள். இந்த பிக்பாஸ் சீசனையும் சக்சஸ்புல்லாக தொடர்ந்து நடத்துவோம் என குறிப்பிட்டு உள்ளனர். ஆனால் அடுத்த தொகுப்பாளர் பற்றி எந்தவித அறிவிப்பும் அதில் இடம்பெறவில்லை.

(Visited 8 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்