பொழுதுபோக்கு

பிக் பாஸில் இன்று நடக்கப்போவது என்ன?

பிக் பாஸ் ஆரம்பமானாலே வார இறுதி நாளான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையில் தான் ரசிகர்கள் அதிக ஆவலுடன் காத்திருப்பார்கள்.

அந்தவகையில் இன்று வெளியான மூன்று ப்ரோமோக்களும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல் ப்ரோமோவில்,

பிக் பாஸ் சீசன் 9 தொகுப்பாளராக உள்ள விஜய் சேதுபதி, போட்டியாளர்களின் பெயர்களை கேட்டு உரையாடும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதில் ஆதிரை மட்டும் உட்கார்ந்தபடியே தனது பெயரை கூறுவது போலவும், அதற்கு விஜய் சேதுபதி, “ஏன் ஆதிரையால் எழுந்து நிற்க முடியவில்லையா? மற்ற நான்கு பேரும் எழுந்து சொன்னாங்கல?” என்று கேட்க, ஆதிரை “Ok” என்று பதிலளித்தார்.

அதற்கு விஜய் சேதுபதி, “‘Ok’ என்றால் என்ன அர்த்தம்?” என்றதற்கு தான் நார்மலாக சொன்னதாக கூறினார். “4 பேர் உங்களுக்கு முன்ன எழுந்து நின்னு பேசுனாங்கல அதை ப்ரேக் பண்ண என்ன அவசியம்?” என கேட்பார். அதற்கு ஆதிரை “அது அவர்களுடைய விருப்பம்னு நினைச்சேன்” என்று கூறினார். இதற்கு விஜய் சேதுபதி, “உங்களுடைய விருப்பத்திற்காக இங்கு நடக்க முடியாது” எனக் கடுமையாக கூறியுள்ளார்.

இரண்டாவது ப்ரோமோவில்,

கம்ருதீன் “பிக் பாஸ் வீட்டார், சூப்பர் டீலக்ஸ் வீட்டாரை தொடர்ந்து டார்கெட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதில் சபரிக்கும் ஒரு பங்கு இருக்கிறது போல” என்று அவர் கூற, விஜய் சேதுபதி, “இப்போ நீங்கள் தான் உங்கள் கூட கூட்டம் கூட்டி பாலிடிக்ஸ் பண்ணுற மாதிரி தெரிகிறது” என பதிலளிக்கிறார். தொடர்ந்து கம்ருதீன் விளக்கம் அளிக்க முயற்சிக்கும் போது கம்ருதீனை பேச விடாமல் அடுத்து கேள்வி கேட்கும் போது நேரிடையாக பதிலளியுங்கள் என விஜய் சேதுபதி கூறுவது போல் உள்ளது.

மூன்றாவது ப்ரோமோவில்,

“யார் ஆக்‌ஷன் கட்டு என நினைக்கிறீர்கள்?” என்ற விஜய் சேதுபதியின் கேள்விக்கு பலரும் பார்வதியைச் சுட்டிக்காட்டினர். இதனை பார்வதி கேஷுவலாக எடுத்துக்கொண்டார்.

அதற்கு விஜய் சேதுபதி, “நீங்கள் இதை கூலாக எடுத்துக் கொள்ளலாம், ஆனால் வெளியே இது எப்படி ப்ராஜெக்ட் செய்யப்படுகிறது என்பது முக்கியம். அது நாகரீகம் அல்ல, நல்லதல்ல” என்று கூறுகிறார். அதனையடுத்து வழக்கம் போல பார்வதி தான் எந்த தவறும் செய்யவில்லையே என்பது போல திவாகரிடம் பேசிக்கொண்டு இருக்கிறார்.

(Visited 2 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்