பொழுதுபோக்கு

உச்சகட்ட பரபரப்பில் பிக்பாஸ்… திவாகருக்கு நடந்த விபரீதம்

பிக்பாஸ் என்றாலே எப்போது ஆரம்பிக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். அது ஏன் என்றால் வீட்டுக்குள் இடம்பெறும் சண்டைகள், கொசிப்ஸ் மற்றும் அவர்களின் சுயரூபம் எப்போது வெளிவரும் என்பதை பார்ப்பதற்குத்தான்.
இப்படியிருக்க விஜய் டி.வியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9ஆரம்பிக்கப்பட்டு 4 நாட்கள் கடந்துவிட்டன.
மற்றைய சீசன்களைவிட இம்முறை பிக்பாஸ் வீடு பல சர்ச்சைகளை எதிர்கொண்டுள்ளது. அகோரி, கிளேமர், இரட்டை அர்த்த நாயகிகள், யூடியூப் பிரபலங்கள் உட்பட அனைத்து போட்டியாளர்களும் ஒரு மார்க்கமாகவே இருக்கின்றார்கள்.
அதிலும் ஆரம்பிக்கப்பட்ட உடனேயே சண்டைகளும் வெடிக்க ஆரம்பித்துவிட்டன.
இந்த நிலையில் இன்று அக்டோபர் ஒன்பதாம் திகதிக்கான முதல் ப்ரமோ வெளியாகி  பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
முதல் ப்ரமோ…
பிக் பாஸ் கொடுத்த வித்தியாசமான டாஸ்க்கால் ‘மோர்னிங் ஆக்டிவிட்டி வாட்டர் மெலன் அகாடமி’ இந்த டாஸ்க்குல எல்லோரும் நடிக்கணும்.
இந்த நிலையில், வி.ஜே. பார்வதி நடிப்பின் உச்சகட்டமா திவாகரை நெஞ்சில் ஓங்கி உதைத்து விட்டு, “என்னைக்கு இருந்தாலும் நான் தான் உனக்கு லவ்வு”னு சொன்னாங்க.
இதைப் பார்த்த சக போட்டியாளர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.
மூன்றாவது ப்ரோமோ…
இதில் கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே கடுமையான வார்த்தை சண்டை வெடித்தது காட்டப்பட்டுள்ளது. டாஸ்க் முடிந்த பின்னர், தன்னுடைய நிலையை விளக்க முயன்ற கம்ருதீன், “நானும் வேலை பண்ணிருக்கேன், அதனால நீங்க என்னை குறை சொல்ல முடியாது. நான் என் பங்குக்கு செய்திருக்கேன், தயவு செய்து நீங்க பேசாதீங்க” என எரிச்சலுடன் ஆதிரைக்கு பதிலளிக்கிறார்.
அதற்குப் பதிலாக ஆதிரை அமைதியாக இல்லாமல், “நான் பார்த்தபோது நீங்க அங்க இருந்ததே இல்லை. முந்தின நாள் நான் முழு இரவும் விழித்திருந்து டாஸ்க்கில் பங்கேற்றேன், நீங்க அப்படி பண்ணீங்களா?” என்று கேள்வி எழுப்புகிறார். இதனால் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களும் பதட்டமடைந்தனர்.
பிக்பாஸ் செய்த வேலையால் ஏற்பட்ட இந்த வாக்குவாதம் பிக் பாஸ் வீட்டில் ஒரு புதிய பிளவை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்புகின்றது.
(Visited 3 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்