பொழுதுபோக்கு

பிக் பாஸ் சீசன் 8… இணையத்தில் கசிந்தது 9 போட்டியாளர்களின் பெயர்

விஜய் டிவியில் பிரபல தொடரான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ளது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பெயர்கள் பற்றிய தகவல்கள் இப்போது இணையத்தில் உலாவி வருகிறது.

இதைத் தொடர்ந்து இந்த முறையாவது சர்ச்சையான போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து சுவாரசியமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை கொண்டு செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

கடந்த முறையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பப்லு ப்ரித்விராஜ் கலந்து கொள்வார் என்ற கூறப்பட்டு வந்தது. ஆனால் அவர் இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்து வரும் கிரண் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.

மேலும் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலமான அமலா ஷாஜி தமிழ் பிக் பாஸ் சீசன் 8 ல் கலந்து கொள்ள உள்ளார்.

நடிகை சோனியா அகர்வால், பாடகி கல்பனா போன்றோரும் இந்த சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

எப்போதுமே காதல் போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது வழக்கமாக இருக்கும் நிலையில் டிடிஎஃப் வாசன் மற்றும் அவரது காதலியும் கலந்து கொள்ள உள்ளார்கள்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்ற வரும் ஷாலினி ஜோத டிடிஎஃப் வாசன் காதலி ஆவார்.

மேலும் ரோபோ சங்கர் அல்லது அவரது மகள் இந்திரஜா என இவர்களுள் ஒருவர் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது. கடைசியாக பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் பிக் பாஸ் சீசன் 8இல் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகின்றது.

 

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content