பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அருண் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கிறது. இந்த நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து அருண் பிரசாத் வெளியேறி இருக்கிறார்.
பைனல் லிஸ்டில் வந்துவிடுவார் என்று பெரிய அளவில் இவர் மீது எதிர்பார்ப்பு இருந்தது.
இவருடைய காதலியும் முன்னால் டைட்டில் வின்னருமான அர்ச்சனா இவருக்கு வெளியில் இருந்து கொண்டே பிரமோஷன் வேலைகளும் சிறப்பாக செய்தார்.
இந்த நிலையில் தான் எதிர்பாராத விதமாக இப்படி ஒரு எலிமினேஷன் நடைபெற்று இருக்கிறது. வீட்டுக்குள் வந்த தொடக்கத்தில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தார் அருண்.
அதன் பின்னர் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே வரவும் தன்னுடைய இருப்பை தெரிவிக்க அதிரடியாக சண்டை போட ஆரம்பித்தார்.
இவர் அதிகமாக சண்டையிட்டது தீபக் மற்றும் முத்துக்குமரனிடம் தான். ஒரு கட்டத்திற்கு மேல் இதெல்லாம் தவறு என புரிந்து கொண்டு மனம் மாறினார்.
அர்ச்சனா உள்ளே வந்து போன பிறகு அருண் மீதான பார்வையும் ரசிகர்களுக்கு மாறியது. 98 வது நாளில் எலிமினேட் ஆகியிருக்கும் அருணின் சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது.
அருண் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பேசி வந்திருக்கிறார். 98 நாட்கள் உள்ளே இருந்ததற்கு 19 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறார்.