ஜெர்மனிக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க அதிபர்
மில்டன் சூறாவளி அமெரிக்காவைத் தாக்கியதால் கடந்த வாரம் தனது பயணத்தை ரத்து செய்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் வெள்ளிக்கிழமை ஜெர்மனிக்கு விஜயம் செய்ய உள்ளார் என்று ஜேர்மன் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
பிடனின் வருகை முறையான அரசுப் பயணத்தின் தன்மையைக் கொண்டிருக்காது, ஆனால் நடைபெற்று வரும் கூட்டுப் பணிகளில் கலந்துகொள்வதற்காக இருக்கும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் மற்றும் ஜனாதிபதி ஃபிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர் ஆகியோருடனான உத்தியோகபூர்வ சந்திப்புகள் அடுத்த வெள்ளிக்கிழமைக்கான நிகழ்ச்சி நிரலில் இருப்பதாக Spiegel இதழ் கூறியது.
உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் நடக்கும் போர்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அது கூறியது.
(Visited 4 times, 1 visits today)