தமிழ்நாடு

அதிசயம் நடந்தால் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஒரு இடம் மட்டுமே வெற்றி பெறும் – நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி

நாகூரில் நடைபெறும் திருமண விழாவிற்கு கலந்து கொள்வதற்காக இன்று விமான மூலம் சென்னையில் இருந்து திருச்சிக்கு வருகை தந்த நடிகர் எஸ்.வி.சேகர் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் நாடாளுமன்றத் தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய அளவில் மீண்டும் பிரதமர் ஆவார்.

ஆனால் தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலையின் பங்கு அதில் பூஜ்ஜியமாக தான் இருக்கும்.

அண்ணாமலை ஒரு குழந்தைத்தனமாக செயல்பட்டு வருகிறார். அரை மணி நேரம் மட்டுமே நடக்கிறார்.அப்படி இல்லை என்றால் கூட்டத்தில் சென்று அவரே நடுவில் நின்று கொள்கிறார்.

ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறினார் ஆனால் பின் வாங்கினார். ஆனால் ரஜினி வேற, விஜய் வேற, அதிமுகவுடன் கூட்டணி கூடாது என்பதை திட்டமிட்டு தான் அண்ணாமலை செயல்பட்டு வந்தார். அதன் பலனை இந்த தேர்தலில் பார்ப்பார்.

அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கக்கூடிய ஒரு கட்சி ஆனால் தமிழகத்தில் பிஜேபி 3சதவீதம் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு கட்சி. மூன்று சதவீதம் 33 சதவீதம் ஆகுமா என்பதனை வருகின்ற பாராளுமன்ற தேர்தல் மட்டுமே நாம் பார்க்க முடியும்.

அண்ணாமலை பாஜகவிற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார் என்று நான் கூறுகிறேன்.

தமிழகத்தில் அதிசயம் நடந்தால் பாரதிய ஜனதா கட்சி ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெறும். ஏனென்றால் கூட்டணி இல்லை.அண்ணாமலை மோடியின் திட்டங்களை பொதுமக்களிடம் சரியாக எடுத்துச் செல்லவில்லை.

அண்ணாமலை நடைபயணம் செய்வதால் எந்த பயனும் இல்லை எப்போதும் கூட்டம் வந்து ஓட்டாக மாறாது.

அண்ணாமலை பிஜேபியில் உள்ள மூத்த தலைவர்கள் நிர்வாகிகள் யாரையும் மதித்ததில்லை.

பிஜேபி அல்லது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தமிழகம் திராவிட மண் என்றால் அவர்களோடு போய்
கள நிலவரம் அறிந்து ( ground reality ) அதற்கு தகுந்தார் போல் செயல்பட வேண்டும். அதை விட்டுவிட்டு நான் இந்த மண் அந்த மண் என்று பேசிக்கொள்ளக் கூடாது.

ஏன் என் , மண் என் மக்கள் – நம்மண, நம் மக்கள் என்று வைத்திருக்கலாமே.

தமிழகத்தில் எத்தனை சமூகம் இருக்கிறார்களோ அத்தனை சமூகத்திற்கும் சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர் இருக்க வேண்டும். ஆனால், பிராமணர்களுக்கு என்று யாரும் கிடையாது. அத்தனை தொகுதியிலும் பிராமணர்கள் நிற்பார்கள். பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய அளவில் effort எடுக்கிறார்.

ஆனால் அவரது பெருமைகளை பேசாமல் அண்ணாமலை தனது பெருமையை பேசி வருகிறார். அண்ணாமலையை நான் அதிகம் விமர்சிக்கிறேன் என்றால் நான் 1990ல் இருந்து இந்த கட்சியில் இருக்கிறேன் – மிகப்பெரிய அளவில் வளர்ந்த கட்சி சிறப்பாக செயல்பட்டு வரக்கூடிய ஒரு கட்சியை அண்ணாமலை தமிழகத்தில் இன்னும் சிறப்பாக எடுத்துச் செல்லவில்லை என்பது தான்.

திரைப்படங்கள் எடுப்பதற்கு என்று ஒரு விதிமுறைகள் இருக்கிறது.ஆனால் ஏ-சர்டிபிகேட் வாங்கி விட்டு கத்தியால் வெட்டுவது, குத்துவது போன்ற காட்சிகளை காட்டி வருகின்றனர்.அதற்கு யூ-சர்டிபிகேட் கேட்கிறார்கள். மேலும், அவர்கள் எடுக்கவில்லையா இவர்கள் எடுக்கவில்லையா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

வெப் சீரியலுக்கு சென்சார் வேண்டும் அதைவிட டிவியில் காட்டக்கூடிய மெகா சீரியலுக்கு கண்டிப்பாக சென்சார் வேண்டும்.

ராமர் கோயில் கும்பாபிஷேகம் என்பது ஏறத்தாழ 500 ஆண்டு கனவு. சட்டப்படி உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் கட்டப்பட்டது. அயோத்தியில் அங்கு உள்ள முஸ்லிம்களே இந்த கோவிலை பெருமையாக கருதப்படக் கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது.

விஜயகாந்த் மிகவும் நல்லவர் ஆனால் அரசியலைப் பொறுத்தவரை அவ்வளவு நல்லவராக இருக்கக் கூடாது. நேற்று விஜய் கட்சி துவங்கியதாக அறிவித்தபோது கூட நான் கூறினேன். சினிமாவில் கத்தி பிளேடுகளுடன் வருபவர் தவறானவர் என்று அடையாளம் காணலாம் ஆனால் அரசியல் நிஜ வாழ்க்கையில் கூடவே இருப்பவர்கள் நமக்கு துரோகம் செய்வார்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து கோவில் நடை சாத்தப்பட்டதால் நாளை மாலை வந்து அரங்கனை தரிசிக்க உள்ளேன் என தெரிவித்து கோவிலின் வெளியே சாஷ்டாகமாக விழுந்து கும்பிட்டு விட்டு அங்கிருந்து கடந்து சென்றார்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்