மண்பானையில் உள்ள தண்ணீரில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்!
மண்பானையில் நிரப்பி வைக்கப்படும் தண்ணீரில் நன்மைகள் கொட்டிக்கிடப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெயில் காலத்தில் குளிர்சாதன பெட்டியில் தண்ணீரை வைத்து குடிப்பதை விட மண்பானையில் வைத்து குடிப்பதால் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
அந்த வகையில் மண் பானை தண்ணீர் மெட்டபாலிசத்தை தூண்டி அதன் வளர்ச்சியை அதிகரிக்கும். இதனால் உடலில் ஜீரண சக்தி கூடும்.
அதன் சுவையும் மிக நன்றாகவே இருக்கும். இது உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. வெயில் காலத்தில் ஏற்படும் பல்வேறு நோய் தொற்றுகளை தடுக்கக்கூடும்.
மண் பானை நீர் சிறந்த இயற்கை மருந்தாகும். இதன் மூலம் நமக்கு கனிம சத்துக்கள் கிடைக்கின்றன. உடலின் பிஹெச் அளவை சமமாக வைத்துக் கொள்ள இந்த மண் பானை நீர் உதவும்.
இதனால் தொண்டை வறட்சி, இருமல், சளி, ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளும் தீரும். ஃப்ரிட்ஜில் வைத்த தண்ணீரை குடித்தால் ஏற்படும் பக்க விளைவுகள் இந்த மண்பானை தண்ணீரை குடிக்கும் போது நமக்கு ஏற்படாது.