பொழுதுபோக்கு

ரஹ்மானிடம் பணிபுரியும் மோகினி டேயும் கணவரை பிரிவதாக அறிவிப்பு

 

நேற்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா பானு தான் ஏ.ஆர் ரகுமானை பிரிவதாக அறிவித்திருந்தார்.

இந்த செய்தி பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று சாய்ரா பதிவு வெளியிட்டு சில நிமிடங்களில் ஏ.ஆர் ரகுமானிடம் வேலை பார்க்கும் மோனிடே என்பவரும் தன் விவாகரத்து செய்தியை அறிவித்து இருக்கிறார்.

மோகினி டேய் பாசிஸ்ட் இசையமைப்பாளராகவும், அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தல் மற்றும் தயாரிப்பாளர் பாடகர் என்று பல முகங்களை வைத்திருக்கிறார். சமூக வலைத்தளத்தில் செம ஆக்டிவாக இருக்கிறார். அவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 522k பாலோவர்ஸ் பின் தொடர்கிறார்கள்.

தொடர்ச்சியாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தான் கச்சேரிகளில் கலந்து கொள்ளும் போது எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அவர் நேற்று தன்னுடைய கணவரை பிரிவதை குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதில் கனத்த இதயத்துடன் இதனை தெரிவித்துக் கொள்கிறோம். மார்க் மற்றும் நானும் பிரிந்து விட்டோம் என்பதை அறிவிக்கிறோம்.

முதலில் எங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சொல்ல விரும்புகிறேன். நாங்கள் இருவரும் பேசி பரஸ்பரமாக இந்த முடிவு எடுத்திருக்கிறோம். எங்களுக்கு வாழ்க்கையில் வெவ்வேறு விஷயம் பிடித்திருக்கிறது. அதனால் மனமுவந்து பிரிந்து விடுவது தான் சரி என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம்.

இனி நாங்கள் நண்பர்களாக இருப்போம். MaMoGi மற்றும் Mohini day சேர்ந்தே நாங்கள் வேலை செய்வோம். நாங்கள் ஒன்றாக சேர்ந்து வேலை செய்வதில் எப்பொழுதுமே பெருமையாக இருக்கும் எனவே அது தற்போதைக்கு நிற்காது.

உங்களின் அனைவருடைய ஆதரவுக்கு நன்றி நாங்கள் எடுத்த முடிவை தயவு செய்து கௌரவித்து இந்த நேரத்தில் எங்களிடம் பாசிட்டிவாக இருக்க வேண்டுகிறேன். எங்களின் தனிப்பட்ட சுய விருப்பங்களை நீங்கள் மதிக்க வேண்டுகிறேன். நீங்கள் எதையும் தவறாக கணிக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அந்த பதிவில் கூறி இருக்கிறார்.

 

(Visited 55 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!