ஆசியான் மாநாடு ஒத்திவைக்கப்படுமா?
“மத்திய கிழக்கு போரால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள ஆசியான் (ASEAN) உச்சிமாநாடு மிகவும் சுருக்கமான முறையில் நடத்தப்படும்.”
இவ்வாறு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் Ferdinand Marcos Jr அறிவித்துள்ளார்.
இந்த உயர்மட்டக் கூட்டத்தில் எரிபொருள் விநியோகம், உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு ஆகிய மூன்று முக்கிய விவகாரங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய சூழலில் தேவையற்ற ஆடம்பரங்களைத் தவிர்த்து, அத்தியாவசியமான சவால்களை எதிர்கொள்வதில் மட்டுமே இந்த மாநாடு கவனம் செலுத்தும் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆசியான் அமைப்பின் சுழற்சிமுறைத் தலைவராக இருக்கும் மார்கோஸ், இந்தப் பொறுப்பை வரும் அக்டோபர் மாதம் வரை வகிக்க உள்ளார்.
இந்தச் சுருக்கப்பட்ட கால அட்டவணை, போர்ச் சூழலால் ஆசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை கையாள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இவ்வாறு சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக இந்த மாநாடு அமையவுள்ளது.





