வங்கதேச வன்முறை – ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை
வங்கதேசத்தில்(Bangladesh) ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட திப்பு சந்திர தாஸ்(Dipu Chandra Das) என்ற இந்து இளைஞரின் கொலையை உலகெங்கிலும் உள்ள தலைவர்களும் சட்டமியற்றுபவர்களும் கண்டித்து வருகின்றனர்.
அந்தவகையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்(Antonio Guterres) கவலை தெரிவித்துள்ளார்.
“வங்காளதேசத்தில் நாம் கண்ட வன்முறை குறித்து நாங்கள் மிகவும் கவலை கொண்டுள்ளோம்,” என்று குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக்(Stephane Dujarric) ஒரு செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இவரை தொடர்ந்து, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி(Raja Krishnamurthy) இந்தக் கொலையை “குறிவைக்கப்பட்ட கும்பல் தாக்குதல்” என்று விவரித்துள்ளார்.
மேலும், நியூயார்க்(New York) மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜெனிஃபர் ராஜ்குமார்(Jennifer Rajkumar) இந்தக் கொலைக்கு கண்டனம் தெரிவித்து வங்கதேசத்தின் இந்து சிறுபான்மையினருக்கு எதிரான தொடர்ச்சியான வன்முறையால் மிகவும் வருத்தமடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.





