அயலானா, கேப்டன் மில்லரா? : எந்த திரைப்படம் முன்னணியில் உள்ளது!

இந்த பொங்கலுக்கு பாக்ஸ் ஆபிஸில் ‘கேப்டன் மில்லர்’ மற்றும் ‘அயலான்’ திரைப்படங்கள் வெளியாகி இரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளன.
இவ்விரு திரைப்படங்களும், கடந்த 12 ஆம் திகதி வெளியாகின. வேலை நாட்களில் படங்கள் வெளியானபோது நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
முதல் நாள் வசூலில், அயலான் திரைப்படத்தை விட கேப்டன் மில்லர் திரைப்படம் முன்னேற்றம் கண்டது. இதன்படி கேப்டன் மில்லர்’ முதல் நாளில் சுமார் 13 கோடி வசூலித்துள்ளது, ‘அயலான்’ திரைப்படம் 11 கோடி வசூலித்தது.
இரு திரைப்படங்களுக்கும் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், மக்களை உற்சாகப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
வரும் நாட்களில் கேப்டன் மி்ல்லர் படத்தை சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் முந்தும் என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
(Visited 20 times, 1 visits today)