ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய பிரதமருக்கு ‘அரசியல் தலையிடி’ – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இராஜினாமா!

தேசிய பாதுகாப்பு விவகாரம் தொடர்பில் ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Philippa Brant பதவி விலகியுள்ளார்.

இவ்வாரம் அவர் உத்தியோகப்பூர்வமாக பதவி விலகிச்செல்வார் என ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரதமரின் வெளிவிவகாரம் தொடர்பான ஆலோசகர் சில மாதங்களுக்கு முன்னர் பதவி விலகி இருந்த நிலையிலேயே தற்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் விடைபெறுகின்றார்.

கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி ஆஸ்திரேலியா, சிட்னி போண்டி கடற்கரையில் யூத சமூகத்தை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 15 பேர் பலியாகினர். ஆஸ்திரேலியாவில் நடந்த மிகக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலாக இது கருதப்படுகின்றது. இதனையடுத்து பிரதமரின் அரசியல் தலைமைத்துவம் தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் Philippa Brant பதவி துறப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனினும், பயங்கரவாதத் தாக்குதலுக்கும், பதவி விலகலுக்கும் தொடர்பில்லை என லேபர் கட்சி முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!