உலகின் மிகவும் வாழத் தகுதியான நகரங்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய நகரங்கள்
உலகின் மிகவும் வாழத் தகுதியான நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் மீண்டும் 02 ஆஸ்திரேலிய நகரங்கள் இடம்பிடித்துள்ளது.
சமீபத்திய தரவுகளுக்கமைய, மெல்பேர்ன் நகரம் 03வது இடத்திலும், சிட்னி நகரம் 04வது இடத்திலும் உள்ளன.
கோவிட் தொற்றுநோய்களின் போது இந்த இரண்டு நகரங்களும் தரவரிசையில் சற்று கீழே சென்றுவிட்டன.
சுகாதார சேவைகள் – கல்வி – சுற்றுச்சூழல் நட்பு – உள்கட்டமைப்பு போன்ற பல துறைகளைக் கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் இந்தக் குறியீடு வெளியிடப்படுகிறது.
உலகில் வாழத் தகுதியான நகரங்கள் பட்டியலில் இந்த ஆண்டு ஒஸ்ரியாவின் வியன்னா முதலிடம் பிடித்துள்ளது.
டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரம் 02வது இடத்திலும், கனடாவின் வான்கூவர் நகரம் 05வது இடத்திலும், சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரம் 06வது இடத்திலும் உள்ளன.
கனடாவின் கல்கரி 07வது இடத்தையும், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா 08வது இடத்தையும், கனடாவில் ரொறன்ரோ 09வது இடத்தையும் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜப்பானின் ஒசாகா மற்றும் நியூசிலாந்தின் ஆக்லாந்து அணிகள் 10வது இடத்துக்கு சமநிலையில் உள்ளன.