22 மணிநேரம் தொடர்ச்சியாக பறக்கும் விமானம் – படங்களை வெளியிட்ட ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவின் தேசிய விமான நிறுவனமான குவாண்டாஸ் (Qantas), அதன் அதி-நீண்ட தூர ஏர்பஸ் விமானத்தின் படங்களை முதல் முறையாக வெளியிட்டுள்ளது.
குறித்த விமானம் 22 மணிநேரம் தொடர்ச்சியாக பறக்கும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஜெட் விமானம் 2027 ஆம் ஆண்டுக்குள் சிட்னி, லண்டன் மற்றும் நியூயார்க்கிற்கு நேரடி விமான சேவைகளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிரான்சின் துலூஸில் (Toulouse) தயாரிக்கப்படும் இந்த விமானமானது ஏற்கனவே முக்கிய பணிகளை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விமானத்தின் மூலம் நீண்ட தூர பயணங்களை முன்னெடுக்கும் பயணிகள் சுமார் 04 மணிநேரத்தை சேமிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 2 visits today)




