விசா விதிமுறைகளை கடுமையாக்க அவுஸ்திரேலியா திட்டம்
அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டிற்கு அனுமதிக்கப்படும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்படும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வீழ்ச்சியடைந்துள்ள குடியேற்ற அமைப்பை மீண்டும் கட்டியெழுப்பவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
இதன்படி, 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நாட்டிற்கு அனுமதிக்கப்படும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை 250,000 ஆக குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய திட்டத்தின் கீழ் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்கள் மீது கடுமையான விசா முறை அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கொள்கையின்படி, வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் ஆங்கிலத் தேர்வுக்கு உயர் தரவரிசையை எட்ட வேண்டும்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை கடந்த ஒரு வருடத்தில் 10,000 பேர் அவுஸ்திரேலியாவிற்கு வருகை தந்துள்ளனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போது தெரிவித்தார்.