ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா- வெளியே சென்ற பொது மயக்க மருந்து கொடுத்து பெண் எம்.பி பலாத்காரம்!

ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த எம்.பி. பிரிட்டானி லாவ்கா (37). சுகாதார துறைக்கான துணை மந்திரியாக பதவி வகிக்கும் லாகா, குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள எப்பூன் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இந்நிலையில், இரவில் பொழுதுபோக்க தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வெளியே சென்றபோது, அவரை சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதன்பின் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டு உள்ளனர். இந்த துயர செய்தியை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்திருக்கிறார்.

அந்த பதிவில், இந்த சம்பவம் யாருக்கு வேண்டுமென்றாலும் நடக்கலாம். எங்களில் பலருக்கு இதுபோன்ற சோகம் நடந்துள்ளது என தெரிவித்து உள்ளார். என்னுடைய உடலில் போதை பொருள் கலந்திருந்தது என்பது மருத்துவமனையில் நடந்த பரிசோதனை முடிவில் உறுதியானது. ஆனால், அவற்றை நான் எடுத்து கொள்ளவில்லை என தெரிவித்து இருக்கிறார்.

Brittany Lauga: Ministers rally behind Queensland Labor MP who was allegedly drugged, sexually assaulted

இந்த சம்பவம் பற்றி லாகா, குயின்ஸ்லாந்து காவல் துறையிடம் புகார் அளித்திருக்கிறார். அந்நாட்டின் வீட்டு வசதி துறை மந்திரி மேகன் ஸ்கான்லன், இந்த குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியும், அச்சமும் ஏற்படுத்துகிறது என கூறியுள்ளார்.

பெண்கள் குடும்ப மற்றும் பாலியல் வன்முறைக்கு ஆளாவது என்பது ஏற்று கொள்ள முடிய பெண்களை பாதுகாக்க கூடிய வகையிலான ஒவ்வொரு விசயமும் மேற்கொள்ளப்படுவதற்கான நடவடிக்கையை எங்களுடைய அரசு தொடர போகிறது. வன்முறை ஏற்படாமல் தடுக்க போகிறது என குறுப்பிட்டார்

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித