குவைட் சர்வதேச விமான நிலையத்தில் தாக்குதல் – எரிபொருள் சேமிப்பு கிடங்கு இலக்கு
குவைட் சர்வதேச விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமான நிலையத்தின் எரிபொருள் சேமிப்பு கிடங்கை இலக்குவைத்து தாக்குதல் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.





