அல்லு அர்ஜுன், அட்லி கூட்டணியில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா

ஜவான்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அட்லி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கின்றார். புஷ்பா 2 படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுன் மீதான எதிர்பார்ப்பு இன்னும் கூடுதலாக உள்ளது.
அல்லு அர்ஜுன், அட்லி கூட்டணியில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக ஏற்கனவே தகவல்கள் கூறப்பட்டது.
தற்போது இதற்கான முன் தயாரிப்பு பணிகளும்
நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா சோப்ராவை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பிரியங்கா சோப்ரா இப்போது ராஜமவுலி, மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
(Visited 2 times, 1 visits today)