கருத்து & பகுப்பாய்வு

AI தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்படும் சிகிச்சை முறை – உரிமையை கைப்பற்றிய அஸ்ட்ராஜெனகா!

செயற்கை நுண்ணறிவில் நிபுணத்துவம் பெற்ற சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட பிரபல நிறுவனமான அல்ஜென் (Algen) உடன் அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

சுமார் $555 மில்லியன் பெறுமதியான இந்த ஒப்பந்தம் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தளத்தைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்படும் மரபணு சிகிச்சைகளை உருவாக்குவதற்கும், அதனை  வணிகமயமாக்குவதற்குமான பிரத்தியேக உரிமத்தை  அஸ்ட்ராஜெனெகாவிற்கு (AstraZeneca) வழங்குகிறது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், நோயெதிர்ப்பு அமைப்பு தொடர்பான கோளாறுகளை இலக்காகக் கொண்ட சிகிச்சைகளை உருவாக்குவதற்கான பிரத்தியேக உரிமைகளை அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) பெறும்.

உலகளாவிய ரீதியில் வளர்ந்து வரும் ஏஐ (AI) தொழில்நுட்பமானது மருந்து மேம்பாட்டிலும் செல்வாக்கு செலுத்த துவங்கியுள்ளது. இதன்மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் $80 பில்லியன் விற்பனை இலக்கை நோக்கி அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca)  செயற்படும் என கூறப்படுகிறது.

இதேவேளை வெற்றிகரமான மருந்து சோதனையை விரைவுபடுத்தும் திறன் ஏஐ தொழில்நுட்பத்திற்கு இருந்தாலும் தாமதமான மருத்துவ பரிசோதனைகளில் AI-ஆல் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் மிகவும் குறைவு. அத்துடன் அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் அங்கீகரிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 21 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

உலகிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட வானிலை ஆய்வகம்

  • April 22, 2023
உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக வானிலை ஆய்வகத்தின் அறிக்கை இந்த விடயம் கூறுகிறது. உலக வானிலையின் ஆகக்கடைசி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த விடயம் கவலை