உலகம்

ட்ரம்ப் மீதான கொலை முயற்சி – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

கடந்த 2024 ஆம் ஆண்டு  அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை கொலை செய்ய முயற்சித்த ரியான் ரூத்துக்கு  (Ryan Routh) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் பாம் பீச்சில் (West Palm Beach) தேர்தல் பிரச்சார நடவடிக்கையின்போது குறித்த படுகொலை முயற்சி அரங்கேற்றப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நேற்று நடைபெற்ற நிலையில், ரூத்தின் குற்றங்கள் “மறுக்க முடியாத அளவுக்கு ஆயுள் தண்டனையை உத்தரவாதம் செய்கின்றன” என்று நீதிபதி ஐலீன் கேனன் குறிப்பிட்டார்.

அவர் ஒரு முக்கிய ஜனாதிபதி வேட்பாளரைக் கொல்ல பல மாதங்களாக திட்டமிட்டதாகவும்,  வழியில் யாரையும் கொல்லும் துணிவுடன் செயற்பட்டதாகவும், கூறிய நீதிபதி அதற்காக எவ்வித வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்தே ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில் ரூத்தின் வழக்கறிஞர் மார்ட்டின் ரோஸ் (Martin Ross), அவர்கள் வழக்கை மேல்முறையீடு செய்வதாகக் கூறினார்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!