ரஷ்ய ஜெனரல் மீதான கொலை முயற்சி – பின்னணியில் போலந்து?
ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரியான விளாடிமிர் அலெக்ஸீவ் (Vladimir Alexeyev) மீதான கொலை முயற்சி சம்பவத்திற்கும் போலந்திற்கும் தொடர்புள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்யாவின் FSB உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவலில், துப்பாக்கிச் சூடு நடத்தியவரை ஆட்சேர்ப்பு செய்வதில் போலந்து உளவுத்துறை ஈடுபட்டதாக எவ்வித ஆதாரத்தையும் முன்வைக்காமல் குற்றம் சாட்டியுள்ளது.
அத்துடன் இந்த கொலை முயற்சியை உக்ரைன் மறுத்துள்ள அதேநேரம் இது தொடர்பில் போலந்து எவ்வித கருத்தும் வெளியிடவில்லை.
இதேவேளை இந்த கொலை முயற்சி தொடர்பில், உக்ரைனில் பிறந்த ரஷ்ய குடிமகன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரி மீதான கொலை முயற்சி – தாக்குதல்தாரி கைது!





