அனுஷ்காவின் அந்த இடத்தை தனதாக்கிய பிரபல நடிகை
 
																																		அனுஷ்காவின் சினிமா வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்திய படம் தான் “அருந்ததி”.
நடிகை அனுஷ்கா நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் தெலுங்கை தொடர்ந்து தமிழிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டு பெரும் வெற்றியை பெற்றது.

இந்த படத்தில் சோனு சூட் வில்லனாக மிரட்டியிருந்தார். அவருக்கு போட்டியாக அனுஷ்காவும் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இப்படம் பல ஆண்டுகள் கழித்து தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.
அருந்ததி திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபல நடிகை ஸ்ரீலீலா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படத்தை இயக்குநர் மோகன் ராஜா இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் அருந்ததி கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீலீலா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

(Visited 1 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
