பொழுதுபோக்கு

அஜித்துடன் இணைந்த இளம் நடிகர்… அட இவரா?

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் விஜய் பட நடிகர் நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி.

இப்படத்தின் பணிகள் நடந்து வரும் நிலையில் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி, அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் முதல் படத்திற்கு குட் பேட் அக்லி என்று பெயரிட்டனர்.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டர், செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. அதேபோல் அஜித்துடன் எஸ்.ஜே. சூர்யா ஷூட்டிங் ஸ்பாட்டில் உட்கார்ந்திருக்கும் புகைப்படங்கள் வைரலானது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து யார்? யார்? நடிக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ள நிலையில், அஜித்தின் 63 வது படமான குட் பேட் அக்லி படம் ஹாலிவுட் ஸ்டைலில் உருவாகி வருகிறது என தெரிகிறது.

இந்தப் படத்தில் சூட்டிங் ஐதராபாத்தில் சில மாதங்கள் நடந்து வந்த நிலையில், அந்த ஷெட்டியூல் முடிவடைந்த பின், அடுத்தகட்ட ஷூட்டிங்கிற்காக படக்குழு ஸ்பெயின் சென்றுள்ள நிலையில் அங்கு ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்படம் 2025 ஆம் ஆண்டு அஜித் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், கைதி, அந்தகாரம் ஆகிய படங்களில் நடித்த அர்ஜூன் தாஸ், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். சமீபத்தில் அநீதி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வந்த அர்ஜுன் தாஸ் தற்போது அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இணைந்துள்ளார்.

இதுகுறித்து அர்ஜூன் தாஸ் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில்,

“அஜித் சாருடன் இணைந்ததில் நான் மகிழ்கிறேன். இது என் கனவு நினைவாகிய நேரமிது. அதற்காக அஜித் சாருக்கு என் இதயத்தில் ஆழத்திலிருந்து நன்றி கூறிக் கொள்கிறேன். இப்படம் மூலம் உங்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தியாக்குவேன் என நம்புகிறேன். ரசிகர்கள் அஜித் சாருடன் படம் பண்ணுவீர்கள் என கேட்டார்கள். தற்போது அது நடந்துள்ளது. அனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி’’ எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 38 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்