அடிக்கடி பாராசிட்டமால் எடுத்துக்கொள்பவரா நீங்கள்? அவதானம்
பாராசிட்டமால் மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக்கொள்வது ஆபத்தானது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரானா வைரஸ் சோதனையிலிருந்து தப்பிப்பதற்காக ஒரு சிலர் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதாக தகவல் வெளியாகியது.

குறிப்பாக வெளிநாட்டில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வருபவர்கள் தங்களுடைய உடல் வெப்பநிலையை குறைப்பதற்காக பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பாராசிட்டமால் மாத்திரைகளை தினசரி எடுத்துக் கொள்வது ஆபத்தானது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பாராசிட்டமால் மாத்திரைகளை தினந்தோறும் பயன்படுத்துவதால் ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதுடன், நெஞ்சு வலியையும் ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
(Visited 17 times, 1 visits today)





