அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

விரைவில் அறிமுகமாகும் Apple MacBook Air m4 – சிறப்பம்சங்கள் என்ன?

2025-ஆம் ஆண்டு இப்போது தான் தொடங்கி இருக்கிறது என்றாலும் சில குறிப்பிட்ட புதிய ஆப்பிள் டிவைஸ்களின் வெளியீடுகளுக்காக டெக் ஆர்வலர்கள் மற்றும் யூஸர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இதில் குறிப்பிடித்தகுந்ததாக பல அப்கிரேட்ஸ் மற்றும் AI அம்சங்களோடு வர உளளதாக கூறப்பட்டுள்ள iPhone SE 4 மாடல் எப்போது வெளியிடப்படும் என்று பலரும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

கடந்த 2024-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் MacBook Pro, Mac Mini மற்றும் iMac ஆகியவை அப்கிரேட் செய்யப்பட்ட நிலையில் MacBook Air M4 வெளியீடும் விரைவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் M4-பவர்ட் தயாரிப்பான iPad Pro 2024 மாடலை வெளியிட்டது. இதனிடையே நிறுவனம் கடந்த அக்டோபரில் ஒன்றல்ல, மூன்று புதிய M4 மேக் தயாரிப்புகளை பற்றி அறிவித்தது. இதில் M4 மேக்புக் ப்ரோ, M4 மேக் மினி மற்றும் M4 ஐமேக் உள்ளிட்டவை அடங்கும்.

வரவிருக்கும் மேக்புக் ஏர் எம்4-ன் வடிவமைப்பு, அதன் நாட்ச் டிஸ்ப்ளேவுடன் கூடிய M3 வேரியன்ட்டைப் போலவே இருக்க கூடும்.

மேக்புக் ஏர் சீரிஸில் M4 சிப்செட்டை கொடுப்பது விலையில் அதிகரிப்பை ஏற்படுத்த கூடும் என்றாலும் யூஸர்களை கவர தொடர்ந்து பல அம்சங்களை அளிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ட்ரெண்ட் தொடரும் என்று நம்பப்படுகிறது.

M4 சிப்செட்டுடன் தற்போதைய மிகப்பெரிய அப்கிரேட் என்னவென்றால், ஆப்பிள் இப்போது 16GB RAM-ஐ அடிப்படை மாடலாக வழங்குகிறது. இது Mac-களில் Apple Intelligence (AI) அம்சங்களை இயக்க உதவுகிறது. மேலும் M4 MacBook Air-ல் இது இருக்கும்.

மேலும் இந்த மாடல் நாட்ச் டிஸ்ப்ளே மற்றும் மேக்சேஃப் (MagSafe) சார்ஜிங் போர்ட்டுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படும், அதே நேரத்தில் இதன் டிசைன் ப்ரோ வெர்ஷனை போலவே இருக்கும்.

வரவிருக்கும் புதிய மேக்புக் ஏர் 13 மற்றும் 14 இன்ச் வேரியன்ட்ஸ்களில் கிடைக்க கூடும். புதிய 12MP கேமரா, நம்பகமான நான்கு ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், M4 சிலிகானுடன் 23 மணிநேர பேட்டரி ஆயுள் மற்றும் மேக்சேஃப் சார்ஜிங் ஆகியவற்றுடன் இது அறிமுகமாகும் என தெரிகிறது.

இறுதியாக விலையை பொறுத்தவரை MacBook Air லைன்அப் சமீபத்திய ஆண்டுகளில் ஒவ்வொரு வெளியீட்டிலும் அதிகரித்தே நினர்ணயிக்கப்பட்டு வருகிறது. எனவே வரவிருக்கும் M4 MacBook Air-ன் விலையும் அதிகமாகவே நிர்ணயிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் புதிய M4 சிப் மூலம் இயக்கப்படும் அப்டேட்டட் MacBook Air-ஆனது குறிப்பிடத்தக்க செயல்திறன் மேம்பாடுகள், நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா தொழில்நுட்பத்தை யூஸர்களுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி