அனுர – இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!! முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கருக்கும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் இன்று காலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் மற்றும் இலங்கையின் அரசியல் எதிர்காலம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட நான்கு உயர்மட்டத் தலைவர்கள் இன்று அதிகாலை இந்தியாவின் புதுடில்லிக்கு சென்றுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், விசேட வைத்திய நிபுணர் டாக்டர் நிஹால் அபேசிங்க மற்றும் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோர் இந்தியாவிற்கு சென்ற தேசிய மக்கள் படையின் ஏனைய உறுப்பினர்களாவர்.
இந்திய அரசின் அதிகாரப்பூர்வ அழைப்பின்படி, அவர்கள் சுற்றுப்பயணத்தில் இணைகின்றனர்.