1996 இல் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் செய்த செயலை சுட்டிக்காட்டி அநுர நன்றி தெரிவிப்பு!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி திட்டமிட்ட அடிப்படையில் நடப்பது மகிழ்ச்சியளிக்கின்றது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க Anura Kumara Dissanayake தெரிவித்தார்.
போட்டி நடைபெறுவதை உறுதிப்படுத்தியதற்காக பாகிஸ்தான் பிரதமருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஐ.சி.சி. முன்னெடுத்த முயற்சிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராட்டு தெரிவித்துள்ளார்.
1996 உலகக் கோப்பையின் போது, பாதுகாப்பு காரணங்களுக்காக ஏனைய அணிகள் கொழும்பில் விளையாடாத நேரத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இலங்கைக்காக காட்டிய ஒற்றுமையை ஒருபோதும் மறக்கமாட்டோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, பாகிஸ்தான் பிரதமருக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சரும் நன்றி தெரிவித்துள்ளார்.





