முதல் வேலையாக காதலை பிரேக் அப் பண்ணிய அன்ஷிதா
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்தது. 105 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முத்துக்குமரன் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு பிக் பாஸ் டிராபி மற்றும் ரூ.40 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பைனல் மேடை வரை வந்த செளந்தர்யாவுக்கு இரண்டாவது இடமும், விஷாலுக்கு மூன்றாவது இடமும் கிடைத்தது.
பிக் பாஸ் வீட்டில் அதிக காதல் சர்ச்சையில் சிக்கியவர் என்றால் அது அன்ஷிதா தான். அவர் இந்நிகழ்ச்சிக்கு உள்ளே வரும் முன்னரே நடிகர் அர்னவ்வை காதலிப்பதாக சர்ச்சை எழுந்தது.
பின்னர் இந்நிகழ்ச்சியில் அவர் விஷால் உடன் நெருங்கிப் பழகி வருவதை பார்த்த நெட்டிசன்கள், இவர்கள் காதலிக்கிறார்களா அல்லது நண்பர்களாக இருக்கிறார்களா என்பது தெரியாமல் குழம்பிப்போய் இருந்தனர்.
இந்நிகழ்ச்சி முடியும் வரை இவர்கள் இருவருக்கும் இடையே உள்ளது நட்பா காதலா என்பதை இருவருமே உறுதிபடுத்தவில்லை.
பிக் பாஸ் வீட்டில் ரீ எண்ட்ரி ஆனபோது கூட விஷால் உடன் அன்ஷிதா நெருக்கமாக பழகி வந்தார். இதனிடையே பிக் பாஸ் பைனலின் போது போட்டியாளர்களிடம் விஜய் சேதுபதி ஒரு கேள்வி கேட்டார்.
அதன்படி, பிக் பாஸ் வீட்டை விட்டு நிஜ உலகத்திற்குள் சென்றதும் நீங்கள் செய்த முதல் வேலை என்ன என கேட்டிருந்தார். இதற்கு போட்டியாளர்கள் தாங்கள் என்ன செய்தோம் என்பதை விளக்கி கூறினர். அதில் அன்ஷிதா அளித்த பதில் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாக தன் காதலை முறித்துக் கொண்டதாக கூறிய அன்ஷிதா, அதற்கான காரணத்தையும் கூறினார். தன் காதலன் வேறு ஒரு பெண்ணுடன் சந்தோஷமாக இருந்ததாகவும், அப்போது இனி அவனுக்கு நான் தேவைப்படமாட்டேன் என முடிவெடுத்து காதலை முறித்துக்கொண்டதாக தெரிவித்தார்.
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான் என்னை இன்னொருவரிடம் இருந்து மீட்டுக் கொடுத்திருக்கிறது என அன்ஷிதா கூறியுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவர் அர்னவ்வை தான் பிரேக் அப் செய்துவிட்டாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.