ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலை தாக்கும் மற்றொரு புயல் – 11000 பேர் வெளியேற்றம்!
ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலை தாக்கிய தொடர்ச்சியான காற்று மற்றும் மழையின் காரணமாக 11,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபீரிய தீபகற்பத்தை லியோனார்டோ (Leonardo) புயல் தாக்கியதை தொடர்ந்து மற்றொரு புயலான மார்டா இவ்வார இறுதியில் தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் நிலைமையானது, கடுமையான மழைவீழ்ச்சி மற்றும் பனிப்பொழிவை கொண்டுவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வெள்ளம் ஏற்படும் என்ற அச்சத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் ஸ்பெயின் முழுவதும் கிட்டத்தட்ட 170 சாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், போர்ச்சுகீசிய ரயில் சேவைகள் தடைபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




