WhatsApp நிறுவனம் வெளியிட்ட மேலும் ஒரு புதிய Update
WhatsApp அழைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப் கால்களில் மேலும் ஒரு கூடுதல் அம்சத்தை இணைத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய மற்றும் எளிய தொலைத்தொடர்பு சாதனமாக விளங்கி வருவது மெட்டா நிறுவனத்தினுடைய WhatsApp செயலி. உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு சாதனமாக உருவெடுத்து இருக்கிறது. மக்களினுடைய பல தகவல்கள் WhatsApp வழியாகவே பெரும்பாலும் பரிமாறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து பல தொலைத்தொடர்பு சாதனங்களை பின்னுக்கு தள்ளி இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு சாதனமாக WhatsApp உருவெடுத்து இருக்கிறது. இந்த நிலையில் WhatsApp உடைய பாதுகாப்பு குறித்த கேள்விகளும் எழுந்த வண்ணம் இருக்கிறது.
இந்த நிலையில் மெட்டா நிறுவனம் WhatsAppஇன் பாதுகாப்பு அம்சங்களை அதிகப்படுத்த தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது WhatsApp ப்ரைவசியில் கூடுதல் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது.
WhatsApp அழைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தற்போது புதிதாக பிரோடக்ட் ஐ பி அட்ரஸ் என்ற அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் WhatsApp அழைப்புகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. WhatsApp பயனாளரின் பெயர், ஐபி அட்ரஸ், லொகேஷன் ஆகியவற்றை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இவை சோதனை முயற்சியில் தற்போது சில ஃபோன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு வகை ஃபோன்களில் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை பயன்படுத்த WhatsApp செட்டிங்ஸ் சென்று ப்ரைவசியை கிளிக் செய்து, நியூ அட்வான்ஸை தேர்வு செய்து, எனெபிள் செய்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.