செய்தி விளையாட்டு

CSK அணியின் மற்றொரு முக்கிய வீரரும் காயம் – ஐபிஎல் விளையாடுவது சந்தேகம்?

ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவாகவே நாள்கள் இருக்கும் நிலையில், சென்னை அணியின் முக்கிய வீரர்கள் காயத்தால் பாதிக்கப்பட்டிருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்கள் 3 பேர் இப்போது காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர்.

ஏற்கனவே, சிவம் துபே காயமடைந்து சிகிச்சையில் இருக்கிறார். அவர் ரஞ்சி போட்டியில் விளையாடியபோது ஏற்பட்ட காயத்தில் எஞ்சிய ரஞ்சி சீசன் விளையாடுவதில் இருந்தே விலகியுள்ளார். இப்போது துபே மருத்துவ சிகிச்சையில் இருந்தாலும் ஐபிஎல் போட்டிக்குள் முழு உடல் தகுதியை எட்டுவிடுவாரா? என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. அவரைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா முழங்கால் வலி காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடவில்லை.

இப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான டெவோன் கான்வேவும் காயத்தில் சிக்கியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டி விளையாடும்போது அவருக்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. நியூசிலாந்து அணியின் பிசியோதெரபிஸ்டுகள் களத்திற்கு உடனடியாக சென்று டெவோன் கான்வேவை பரிசோதித்து வெளியே அழைத்து வந்தனர். காயத்தின் தன்மை அதிகமாக இருப்பதால் உடனடியாக எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைக்கப்பட்டார்.

இதனையடுத்து எடுக்கப்பட்ட எக்ஸ்ரேவில் டெவோன் கான்வேவுக்கு கட்டை விரல் முறிவு இருப்பது உறுதியானது. இதனால் அவர் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். ஆனால் எவ்வளவு நாள் ஓய்வில் இருக்க வேண்டும் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இப்போது காயமடைந்திருக்கும் மூன்று வீரர்களை தவிர டேரி மிட்செல், முஸ்தாபிசூர் ரஹ்மான் ஆகியோர் ஏற்கனவே காயமடைந்து சிகிச்சையில் இருக்கிறார்கள். இவர்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் தான்.

கேப்டன் எம்எஸ் தோனியின் அபிமானத்தை பெற்றிருக்கும் இவர்கள் இப்போது காயமடைந்திருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு முன்பு முழு உடல்தகுதியை எட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் சிஎஸ்கே இருக்கிறது.

ஐபிஎல் 2024க்கான சிஎஸ்கேயின் முழு அணி:

எம்எஸ் தோனி, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, ஷேக் ரஷீத், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர், மொயின் அலி, சிவம் துபே, நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா, ரச்சின் ரவீந்திரா (1.8 கோடி), ஷர்துல் தாக்கூர் (4 கோடி), டேரில் மிட்செல் (14 கோடி), சமீர் ரிஸ்வி (8.4 கோடி), முஸ்தபிசுர் ரஹ்மான் (2 கோடி), அவனிஷ் ராவ் ஆரவெல்லி (20 லட்சம்).

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி